Lord Murugan songs


1. அழகென்ற சொல்லுக்கு
முருகா ... முருகா ...
அழகென்ற சொல்லுக்கு முருகா )2)
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா -(அழகென்ற(

சுடராக வந்தவேல் முருகா
கொடும் சூரரை போரிலே வென்றவேல் முருகா(2)
கனிக்காக மனம் நொந்த முருகா )2)
முக்கனியான தமிழ்தந்த செல்வமே முருகா -(அழகென்ற ...)

ஆண்டியாய் நின்றவேல் முருகா
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா )2)
பழம் நீ அப்பனே முருகா )2)
ஞானப் பழம் உன்னை அல்லாது பழமேது முருகா -(அழகென்ற (

குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா (2)
சக்தி உமை பாலனே முருகா (2
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா -(அழகென்ற ..(

ப்ரணவப் பொருள்கண்ட திரு முருகா
பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா )2)
அரகரா ஷண்முகா முருகா )2)
என்றே பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா -(அழகென்ற (

அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா )2)
கண்கண்ட தெய்வமே முருகா )2)
எந்தன் கலியுக வரதனே அருள்தாரும் முருகா (அழகென்)

முருகா ... முருகா ... முருகா ...    

2. 'எந்தன் குரலில்'
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
(
எந்தன் ... )
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே (எந்தன் ... )
ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே
அங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே (2)நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே (2)அதில் ... நான் என்றும் மாறாத தனி இனமே -(எந்தன் ... )

கன்னித்தமிழ் பாடுவது புது சுகமே
அதில் காண்பதெல்லாம் கந்தன் கவி நயமே (2)என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே (2)அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே -(எந்தன் ... )


3எனக்கும் இடம் உண்டு
எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில் -(எனக்கும்)கார்த்திகை விளக்கு பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்(2)தினம் பூத்திடும் ஞான மலர்களுடன்
ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
புல்லாய் முளைத்து தடுமாறும் -(எனக்கும் (
நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம்(2)வரும் காற்றில் அணையா சுடர்போலும்
இனி கந்தன் தருவான் எதிர்காலம்
கந்தன் தருவான் எதிர்காலம் -(எனக்கும்)
ஆடும் மயிலே என்மேனி
அதில் அழகிய தோகை என் உள்ளம் )2)நான் உள்ளம் என்னும் தோகையினால்
கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
உறவு கண்டேன் ஆகையினால் -(எனக்கும்
 ...(

4.  'உள்ளம் உருகுதய்யா'

உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா ... முருகா
உன்னடி காண்கையிலே,         அள்ளி அணைத்திடவே(2)எனக்குள் ... ஆசை பெருகுதப்பா
முருகா ... உள்ளம் உருகுதய்யா
பாடிப் பரவசமாய் உன்னையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி (2)முருகா ... ஓடி வருவாயப்பா -(உள்ளம்…. )
பாசம் அகன்றதய்யா ... பந்த
பாசம் அகன்றதய்யா
உந்தன் மேல் ... நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே )
2)
எந்தன் ... ஈனம் மறைந்ததப்பா-(உள்ளம்…. )ஆறு திருமுகமும்
உன் அருளை ... வாரி வழங்குதய்யா
வீர மிகுந் தோளும்(2)கடம்பும் ... வெற்றி முழக்குதப்பா-(உள்ளம்…. )கண்கண்ட தெய்வமய்யா (2)நீ இந்தக் கலியுக வரதனய்யா
பாவி என்றிகழாமல்(2)எனக்குன் ... பதமலர் தருவாயப்பா-(உள்ளம்
…. )


5. உனைப் பாடும்

உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை
எனை காக்க உனையின்றி யாருமில்லை -(உனைப் பாடும் ... )
முருகா ... முருகா
கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு ... கருணையில் உருவான அற்புதமே (2)சிற்பச் சிலையாக நிற்பவனே (2)வெள்ளை ... திருநீறில் அருளான விற்பனனே
முருகா ... முருகா -(உனைப் பாடும் ... )
அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை ... அழகு வழிகின்ற எழில் வனமே (2)குமுத இதழ் விரிந்த பூச்சரமே (2)உந்தன் ... குறுநகை தமிழுக்கு திருவரமே
முருகா ... முருகா -(உனைப் பாடும் ... )

6.  'உன்னையும் மறப்பதுண்டோ'

உன்னையும் மறப்பதுண்டோ?மறந்தால் உள்ளத்தில் அமைதியுண்டோ?முருகா ... (உன்னையும் ... )
பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ?மறந்தால் மலரும் மணமும் உண்டோ?முருகா நான் ... (உன்னையும் ... )
கண்ணையும் மறந்திருப்பேன்
கையுடன் கால்களும் மறந்திருப்பேன் (கண்ணையும் ... )
முருகா நான் ... (உன்னையும் ... )
எண்ணத்தின் ஒளிச்சுடரே (2)உன்னை எப்படி நான் மறப்பேன்? ... நான் (உன்னையும் ... )
பொன்பொருள் மறந்திருப்பேன்
இகழும் புகழும் மறந்திருப்பேன் ... முருகா
என்னுயிரான உன்னை (2)மறந்தால் எவ்விதம் வாழ்ந்திருப்பேன்? ... நான் (உன்னையும் ... )
நீந்திய நதி மறப்பேன்
வீடும் நிலமும் மறந்திருப்பேன் ... வடிவேல்
ஏந்திய உனை மறந்தால் (2)உலகில் எத்தனை நாள் இருப்பேன்? ... நான் (உன்னையும் ... )


7. 'நினைத்தபோது நீ வரவேண்டும்'
முருகா ...... நீ வரவேண்டும்
முருகா ...... நான் நினைத்தபோது நீ வரவேண்டும்
முருகா நீ வரவேண்டும்

நினைத்தபோது நீ வரவேண்டும்
நீல எழில் மயில் மேலமர் வேலா (நினைத்தபோது ......)

உனையே நினைந்து உருகுகின்றேனே (2)
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே (2) (நினைத்தபோது ......)

கலியுகத் தெய்வம் கந்தா நீயே
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே (2)
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில் (2)
மாயோன் மருகா ...... முருகா ......
மாயோன் மருகா ...... முருகா ...... என்றே  (நினைத்தபோது ......)

நீ வரவேண்டும் ...... நீ வரவேண்டும்.

8.  'மண்ணானாலும்'                                      

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலை மரமாவேன் 

(மண்ணானாலும் ... )

கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன் (2)
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன் நான் ...(மண்ணானாலும் ... )

பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
பனிப் பூவானாலும் சரவணப்பொய்கை பூவாவேன் (2)
தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்கப் பேச்சாவேன் (2)
மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன் நான் ...(மண்ணானாலும் ... )

சொல்லானாலும் ஓமென்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன் (2)
அருள் உண்டானாலும் வீடும் பேரும் உண்டாவேன் (2)
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன் நான் ... (மண்ணானாலும் ... )

முருகா ... முருகா ... முருகா ... முருகா


9. அன்று கேட்பவன்

அன்று கேட்பவன் அரசன்-மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்
நடுவில் மனிதன் வாழுகிறான்-வீணில்
மனம் தடுமாறுகிறான் இறைவா இறைவா

மனம் போல மாங்கல்யம் என்பார்
தன் மனமே சகலமும் என்பார்
தெரிந்தும் குணத்தை இழக்கின்றான்
இதயம் குலைந்து தவிக்கின்றான்
இறைவா... இறைவா... (அன்று

அடிக்கும் அவன் கை அணைக்கும்
புவி இணைக்கும் தலைவன் இயக்கம்
தலைவன் அணைத்தால் சிரிக்கின்றான்
தன்னை அடித்தால் பழிக்கின்றான்
இறைவா...இறைவா...

கற்றது கை மண் அளவு
கரை கண்டவர் இங்கே குறைவு
கண்டு அறிந்தவன் ஒர் தலைவன்
யாவும் அருள்வான் நம் இறைவன்
இறைவா... இறைவா... அன்று



  • 10. இசையால் வசம்
இசையால் வசம் ஆகா இதயம் எது
இசையால் வசம் ஆகா இதயம் எது...எது..எது..(இசை

இறைவனே இசை வடிவம் எனும் போது
இசையால் வசம் ஆகா இதயம் எது
திசையெங்கிலும் பரவும் கீதம் அது
மலை தேனுண்ட சுவை கூட்டும் தன்மை அது எனும்
இசையால் வசம் ஆகா இதயம் எது

ஆசை சொல்லின் தொடராலே ஆனதே ராகம்
பாடல் அளவை முறைப்படுத்த அமைந்ததே தாளம்
இசையின் பொருள் விளங்க பாடுதல் பாவம்
எனக் கூறும் இம்மூன்றும் இணைந்து இன்பந்தரும் (இசை)

 11.`கந்தன் திருநீரணிந்தால்` கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும் (கந்தன்)

 மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா 
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதல்
 தினம்தினம் நெற்றியிலே திருநீரு அநிந்திடடா 
தீர்ந்திடும் அச்சம் எல்லாம் தெய்வம் துணை காட்டுமடா(கந்தன்)

 சுந்தரவேல் அபிஷேக சுத்த திருநீரணிந்தால் 
வந்த அமர்ந்த மூத்தோரும் வழிபார்த்து போயிடுவார் 
அந்த நேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து 
சிந்தையை குளிரவைக்க சொந்தம் கொண்டாடிடுவார்.

12. 'கற்பனை என்றாலும்' கற்சிலை என்றாலும் 
கந்தனே உன்னை மறவேன் (கற்பனை)

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே அருமறை தேடிடும் கருணையின் கடலே (கற்பனை)

நிற்பதும் நடப்பதும் உன் செயலாலே
 நினைப்பதும் நிகழ்வதும் உன் செயலாலே 
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே 
காண்பதெல்லாம் எந்தன் கண் விழியாலே (கற்பனை)

13. குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்-அங்கே 
குவிந்ததமா பெண்கள் எல்லாம்   கொண்டாட்டம் கொண்டாட்டம்(குன்றத்திலே)

தேவயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்-அங்கு
தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம் 
தங்கம் வைரம் பவளம் முத்து பவளம் செய்தானே 
அதைத் தாங்கிக் கொண்டார் வாங்கிக் கொண்டார் முருகப் பெருமானே முருகப்பெருமானே(குன்றத்திலே)

 உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை 
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை 
வேல்முருகா வெற்றி வேல்முருகா (2)
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள் 
அரகர பாடுங்கள் வருவதைப் பாருங்கள் 
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்(2) 
வேல் முருகா - அரோகரா 
வேல் முருகா - அரோகரா (குன்றத்திலே)